திமுக கூட்டணியில் மநீம...? 2 இடங்களை கேட்க திட்டம்? கமல் எங்கே போட்டியிடுவார்?

கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுகிறதா?
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுகிறதா?PT

செய்தியாளர் - ரமேஷ்

மநீம கட்சி சார்பில், “நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளுடன் பிப்ரவரி 3ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இது சென்னையில் நடைபெறும். இதேபோல கோவை மண்டலத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமானது பிப்ரவரி 4 ம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறும். இக்கூட்டம் கோவையில் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுகிறதா?
தமிழ்நாடு முழுவதும் தொடரும் என்.ஐ.ஏ சோதனை - நீதிமன்றத்தை நாடியது நா.த.க.!

திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளதாகவும், இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட திட்டம் என்றும் கட்சி வட்டாரம் தகவல் தெரிவித்து வருகிறது.

மநீம கமல்ஹாசன்
மநீம கமல்ஹாசன்

இந்நிலையில் தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் திமுக சார்பில் போட்டியிட விரும்புவதால் கோவை எம்பி தொகுதி கமலுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அறிவாலய வட்டாரம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com