தமிழ்நாடு
“ஆ.ராசா என்ன பெரிய தலைவரா?” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“ஆ.ராசா என்ன பெரிய தலைவரா?” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அழைத்தவுடன் நான் சென்று விவாதிக்க அவர் என்ன பெரிய தலைவரா? என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
“என்னுடன் விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வராதது ஏன்?” என ஆ.ராசா கேட்ட நிலையில் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி இதனை தெரிவித்துள்ளார்.
“அவர் என்ன பெரிய தலைவரா? அவர் அழைத்தவுடன் சென்று விவாதிக்க... அவர் சார்ந்த திமுக கட்சிக்கு வேண்டுமானால் அவர் பெரிய தலைவராக இருக்கலாம். அதற்கு காரணம் பணம். ஆனால் இது அதிமுக. காங்கிரஸ் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்த அவரை தவறு செய்த காரணத்தினால் காங்கிரஸ் அரசாங்கமே கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.