திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா - விஜய்
திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா - விஜய்புதிய தலைமுறை

‘மறைமுகமாகப் பேசவேண்டும்’ Vs ‘நெஞ்சுக்கு நேரா பேசுவோம்’ - திருமாவுக்கு பதில் சொன்னாரா ஆதவ் அர்ஜுனா?

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் தலைவர் திருமாவளவனை விமர்சித்துப் பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
Published on

``ஒரு தலித் முதல்வராக வரவேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் விஜய். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று ஏன் சொல்லக்கூடாது? அத ஏன் ஒளிச்சு வைக்கணும்? அதுக்கு Strategy தேவையில்லை. இனிமேல் அரசியலை ஒளிச்சு வச்சுப் பண்ண வேண்டாம்.நெஞ்சுக்கு நேரா பேசுவோம். முதுக்குப் பின்னாடி பேசவேண்டிய தேவையில்லை. எதுக்குப் பயம்’’ என அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் தலைவர் திருமாவளவனை விமர்சித்துப் பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழா
அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாபுதிய தலைமுறை

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் வெளியிடப்பட்டது. த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார்.

திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா - விஜய்
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ - நூலை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்!

முன்னதாக இந்த விழாவில் நூல் உருவாக்கம் குறித்துப் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனருமான ஆதவ் அர்ஜூனா, “விசிக தலைவர் திருமாவளவன் இங்கு இல்லை; ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். தமிழகத்தில் புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து இருக்கிறார். புதிய வரலாற்றை உருவாக்கும் மேடையாக இந்த மேடை உருவாகி இருக்கிறது. மன்னர் பரம்பரையை ஒழிக்க, அம்பேத்கரின் சிந்தனை தேவைப்படுகிறது. திருமா அண்ணனின் கனவு என்ன? தலித் மட்டும் பேசிக் கொண்டிருந்த அம்பேத்கரை, தலித் அல்லாத விஜய் வெளியிடுவது என்பதுதான். புரட்சியாளர் அம்பேத்கரின் கனவு. திருமாவின் கனவு.

ஆதவ் அர்ஜுனா - விஜய்
ஆதவ் அர்ஜுனா - விஜய்அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர் விழா

இன்று அந்த கனவு ஈடேறியிருக்கிறது. விஜய்க்கு அரசியல் தெரியுமா, கொள்கை தெரியுமா என்று விஜய் மீது விமர்சனம் செய்கிறார்கள். கொள்கை பேசியர்வகள் ஏன் அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை? முதல் முறையாக அம்பேத்கரின் நினைவு நாளில், எல்லா அமைச்சர்களும் அம்பேத்கரை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி’’ எனப் பேசினார், அதோடு, “ஆட்சியில் பங்கு கேட்டால் தர முடியாது என்கிறார்கள். ஏன் நாங்கள் கேட்கக் கூடாது? எல்லோரும் சமம் என்று சொல்வதுதான் திராவிடம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை ஏன் பேசக்கூடாது?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பாக “ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேசவேண்டும். மறைமுகமாகப் பேசக்கூடாது’’ எனப் பேசியிருப்பது, கடந்த காலத்தில் திருமாவளவின் பேசிய கருத்துக்கான பதிலாகவே பார்க்கப்படுகிறது.

திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா - விஜய்
“2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும்” - நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனா

அக்டோபர் 27-ம் தேதி தவெகவின் முதல் மாநாட்டில், எங்களோடு கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும் எனப் பேசியிருந்தார். அது, விசிகவை மனதில் வைத்தே விஜய் பேசியதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், விஜயின் கருத்து குறித்துப் பதிலளித்த திருமாவளவன்.

திருமாவளவன் - விஜய்
திருமாவளவன் - விஜய்புதிய தலைமுறை

``இது தேர்தல் உத்தி என்று இல்லாமல் கமெர்சியல் போல உள்ளது. அதாவது, தீபாவளி சமயத்தில் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கூடும் நிலையில், தங்களின் கடைக்கு வாடிக்கையாளர்களை ஈர்க்க, தள்ளுபடி அறிவிப்பது போன்று ஆஃபரை வெளியிட்டுள்ளது போல் இருக்கிறது விஜய்யின் அறிவிப்பு.

இது என்னோட பார்வையிலான விமர்சனம். இது தப்பாக கூட இருக்கலாம். இது சரியில்லை-னு கூட நீங்க சொல்லலாம். கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். விஜய்யின் இந்த அறிவிப்பு எதுக்கு பயன்படுகிறது என்றால், தி.மு.க., கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. மற்றபடி அவங்க எதிர்பார்க்கும் ஏதும் நடக்காது. அந்த விளைவை உருவாக்காது. அதிகாரப் பகிர்வை அளிப்பதாக இருந்தால், இதனை மறைமுக செயல்திட்டமாகக் கையாண்டிருக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா - விஜய்
“2026-ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள்” - புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு!

இன்றைய கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருக்கும் அரசியல் ஆர்வலர்கள், “ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேசவேண்டும் என்கிற கருத்துக்கள் திருமாவளவனுக்கு ஆதவ் அர்ஜுனா சொன்ன பதிலே” என்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com