\
அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் 

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் 

அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் 
Published on

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

அரசாணைப்படி கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்குதல் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்டவை கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. 

இதையடுத்து மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதாரத்துறை இயக்குநர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com