தி.மலை: பொதுமக்களை அச்சுறுத்திய தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்

தி.மலை: பொதுமக்களை அச்சுறுத்திய தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்

தி.மலை: பொதுமக்களை அச்சுறுத்திய தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள்
Published on

போளூர் பகுதியில் சுற்றுத் திரிந்த 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திய கால்நடைத்துறை மருத்துவர்கள், அவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பஜார் வீதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் பொது மக்களை கடித்து வந்ததாக புகார்கள் இருந்தன. இதில், காயமடைந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதையடுத்து போளூர் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போளூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் போளூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் போளூர் பகுதியில் சுற்றித் திரிந்த 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து பிடிக்கப்பட்ட தெரு நாய்களை போளூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவந்து ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவத் துறை மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தி 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com