தேரணி ராஜன் புதியதலைமுறை
தமிழ்நாடு
"தமிழகத்தில் HMPV வைரஸ் குறித்து கவலைப்பட தேவையில்லை" - மருத்துவர் சொன்ன முக்கிய தகவல்
”இந்த வைரஸ் பற்றி கவலைப்பட ஏதும் தேவையில்லை. பொதுவாக விண்டர் சீசன், மழைக்காலங்களுக்கு பிறகு வரக்கூடிய வைரஸ்.- மருத்துவர்
சீனாவில் வேகமாக பரவி வரக்கூடிய HMPV வைரஸால் தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா என்பது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறும்பொழுது,
”இந்த வைரஸ் பற்றி கவலைப்பட ஏதும் தேவையில்லை. பொதுவாக விண்டர் சீசன், மழைக்காலங்களுக்கு பிறகு வரக்கூடிய வைரஸ் இது. இதனால் அச்சப்படக்கூடிய தேவையில்லை. கொரோனா காலகட்டத்தில் நாம் எம்மாதிரியான எச்சரிக்கையை எடுத்துக்கொண்டோமோ அதே எச்சரிக்கையை நாம் எடுத்துக்கொள்ளலாம்.” என்கிறார் இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.