தமிழ்நாடு
செவிலியரை தரக்குறைவாக பேசிய மருத்துவர் - வீடியோ
செவிலியரை தரக்குறைவாக பேசிய மருத்துவர் - வீடியோ
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், தன்னுடன் பணிபுரியும் செவிலியை தகாத வார்த்தையில் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
செவிலியரை தகாத வார்த்தைகளால் பேசிய மருத்துவர் தமிழ்மணி, பணியின் போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பணிச்சுமை காரணமாக மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்ததால் செவிலியரிடம் தவறாக பேசியதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், மருத்துவர் தமிழ்மணி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.