\
“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி

“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி

“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி
Published on

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனையில் இதயநோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்த, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா, மூச்சுத் திணறல் காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 93. மருத்துவர் சாந்தாவின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவர் சாந்தாவின் இறப்பு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் முதல்வர் பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com