சுனாமி நினைவு தினம்: அஞ்சலி செலுத்த செல்கையில் விபத்துக்குள்ளான ஜெ. ராதாகிருஷ்ணனின் கார்

சுனாமி நினைவு தினம்: அஞ்சலி செலுத்த செல்கையில் விபத்துக்குள்ளான ஜெ. ராதாகிருஷ்ணனின் கார்

சுனாமி நினைவு தினம்: அஞ்சலி செலுத்த செல்கையில் விபத்துக்குள்ளான ஜெ. ராதாகிருஷ்ணனின் கார்
Published on

இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் பட்டினப்பாக்கத்தில் மீனவ குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்துவதற்காக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமது இனோவா காரில் அங்கு சென்றார்.

பட்டினப்பாக்கம் இணைப்பு சாலை சந்திப்பில் வருகை தந்தபோது சென்னையில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி செல்லும் டூரிஸ்ட் வாகனம் தவறுதலாக சென்றதால், நேருக்கு நேர் மோதியதில் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் காரின் முன் பகுதி முழுவதுமாக சேதாரமானது.

எதிரில் வந்த டூரிஸ்ட் வாகனம் சாலையின் வளைவில் தவறாக வந்ததால், விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக எந்த விதத்தில் காயங்களும் இன்றி தப்பிய கூட்டுறவு துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தாமாகவே சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்ததுடன் தொடர்ந்து சுனாமி தினத்தை ஒட்டி பட்டினப்பாக்கத்தில் அஞ்சலி செலுத்தினார்.

விபத்து நடந்த பகுதியில் இருந்து 200 மீட்டருக்குள் மெரினா காவல் நிலையம் இருந்தும் விபத்து குறித்தோ அல்லது போக்குவரத்து நெரிசலை சரி செய்யவோ நெடுநேரமாக எந்த காவலர்களும் வராமல் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com