போட்டியின்றி எம்பியாகும் டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார்
திமுகவை சேர்ந்த டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாகின்றனர்.
நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கக்கூடிய கே.ஆர்.என் ராஜேஷ்குமாருக்கும், தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சோமுவுக்கும் தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனு தாக்கல் முடிந்து பரிசீலனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், திமுகவை சேர்ந்த டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாகின்றனர். சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து 2 பேரும் எம்பிக்களாக தேர்வாவது உறுதியானது. ஏற்கெனவே ஒரு இடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவின் எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.