"உருமாறிய புதிய கொரோனாவால் நம் நாட்டுக்கு பாதிப்பு வராது!" - காரணத்தை விளக்கும் மருத்துவர்

"உருமாறிய புதிய கொரோனாவால் நம் நாட்டுக்கு பாதிப்பு வராது!" - காரணத்தை விளக்கும் மருத்துவர்
"உருமாறிய புதிய கொரோனாவால் நம் நாட்டுக்கு பாதிப்பு வராது!" - காரணத்தை விளக்கும் மருத்துவர்

பிரிட்டனில் மரபியல் மாற்றமடைந்த வீரியமிக்க கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், சென்னை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறித்து மருத்துவர் குகானந்தம் விளக்கியுள்ளார். 

தமிழக அரசு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்றும், மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. இதுகுறித்து தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் குகானந்தம் கூறுகையில், ‘’பிரிட்டனில் பி117 என்று சொல்லக்கூடிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸானது, அங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. அது குளிர்காலம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்தத் தொற்று பாதிக்கப்பட்டவர் மூலம் மட்டுமே நம் நாட்டில் பரவமுடியும்.

முதலில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது இருந்த சிறுசிறு பிழைகளும் தற்போது சரிசெய்யப்பட்டு விமான நிலையங்களிலேயே தீவிரப் பரிசோதனை செய்யப்படுவதுடன் பயணிகளை கண்காணிக்கும் வழிமுறைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த நோய்க்கிருமி நமது நாட்டில் அதிகளவில் பரவ வாய்ப்பில்லை. அப்படி பரவினாலும் வீரியம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. இப்போதும் பாதிக்கப்பட்ட நபரின் மாதிரியை புனேவுக்கு சோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். சோதனை முடிவில்தான் அதுபற்றி தெரியவரும்.

ஒருவேளை வைரஸ் வேகமாக பரவினாலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது இனிமேல்தான் தெரியவரும். ஏனென்றால், புதிய மற்றும் பழைய வகை கொரோனாக்களில் புரத்தத்தின் தன்மையானது ஒரே மாதிரி இருப்பதால், உருமாறிய புதிய கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com