”பொழுதன்னைக்கும் பப்ஜி விளையாடுவியா?” – தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னையில் பப்ஜி விளையாடிய மகனை தாய் திட்டியதால் மனம் உடைந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
death
deathfile

சென்னை கோடம்பாக்கம் லிங்கேஸ்வரர் நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகன் பிரவீன். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வந்த இவர், பகுதி நேரமாக உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பிரவீன் நேற்று நீண்ட நேரமாக செல்போனில் பப்ஜி கேம் விளையாடியதாகக் கூறப்படுகிறது இதனால் பிரவீனை, அவரது தாயார் திட்டியதாகக் கூறப்படுகிறது.

PubG
PubGfile

நேற்று வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், பிரவீன் மட்டும் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது இந்நிலையில், அவரது தாயார் வேலையை முடித்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவரது தாய், அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது மின்விசிறியில் பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோடம்பாக்கம் காவல்துறையினர் பிரவீன், உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com