பித்தளையில் சாமி சிலைகள் செய்து தரும் இஸ்லாமிய குடும்பம்! எங்கே தெரியுமா?

பித்தளையில் சாமி சிலைகள் செய்து தரும் இஸ்லாமிய குடும்பம்! எங்கே தெரியுமா?
பித்தளையில் சாமி சிலைகள் செய்து தரும் இஸ்லாமிய குடும்பம்! எங்கே தெரியுமா?

காஞ்சிபுரத்தில் பித்தளையை உருக்கி உடனுக்குடன் சுவாமி சிலைகளை செய்து கொடுக்கும் இஸ்லாமிய குடும்பத்தினர்.

கர்நாடகா மாநிலம் பீதார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசீம், இவருடைய. அப்பா இமாம் ஆகிய இருவரும் பழைய பித்தளையை உருக்கி சாமி சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் சென்று அங்கேயே தங்கி இருந்து இந்த தொழிலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் காந்தி சாலை அருகில் உள்ள விஜயகிராமணி தெருவில் முகாமிட்டுள்ள இவர்கள், பொதுமக்களிடம் இருந்து பழைய பித்தளை பாத்திரங்களை வாங்கி, உருக்கி உடனுக்குடன் சுவாமி சிலை செய்து தருகின்றனர். இதில், விநாயகர், லஷ்மி, சரஸ்வதி, நடராஜர், முருகன், சாய்பாபா, பெருமாள், கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி சிலை மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணா சிலையையும் அரை மணி நேரத்தில் தயார் செய்து வழங்கி வருகின்றனர்.

பித்தளையை உருக்கி சிலை வார்ப்பு செய்ய எடைக்கு ஏற்ப குறைந்தபட்சம், 300 ரூபாய் முதல் கூலியாக பெறுகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்களது வீட்டில் உள்ள பழைய பித்தளை பாத்திரங்களை கொண்டு வந்து உருக்கி, அதை தங்களுக்கு பிடித்த சுவாமி சிலைகளாக எடுத்துச் செல்கின்றனர். வாடிக்கையாளரிடம் இருந்து வாங்கப்படும் பித்தளை சாமான்கள் வாடிக்கையாளர்கள் கண் முன்னே உருக்குவதாலேயே தங்களுடைய பழைய பித்தளை சாமான்களை நம்பிக்கையுடன் உருக்கி பிடித்தமான சாமி சிலைகளை பெற்றுச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com