ஹிஜாப் விவகாரம் குறித்து எனது நிலைப்பாடு இதுதான்! - அண்ணாமலை விளக்கம்

ஹிஜாப் விவகாரம் குறித்து எனது நிலைப்பாடு இதுதான்! - அண்ணாமலை விளக்கம்
ஹிஜாப் விவகாரம் குறித்து எனது நிலைப்பாடு இதுதான்! - அண்ணாமலை விளக்கம்

மத அடையாளங்களுடன் பள்ளிக்குச் செல்லக் கூடாது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மதுரை மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது:-

”உண்மையான தேசியத்தையும் ஆன்மிகத்தையும் நம்புபவர்கள் பா.ஜ.கவில் இருக்கின்றனர். மாற்றுக் கட்சி என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன் என்னை பொறுத்தவரை இன்று பாஜகவில் இருப்பவர்கள் நாளை பாஜகவில் இணைய உள்ளவர்கள் அவ்வளவே. பா.ஜ.கவின் சித்தாந்தம் புரியும்போது அனைத்து சகோதர சகோதரிகளும் மண் மற்றும் தேசியத்தை காப்பவர்களாக இருப்பர்.

இந்த பட்ஜெட் பகல் கனவு பட்ஜெட். ஹிஜாப் அணிவது அவர்களின் பாரம்பரியத்தை காப்பதாகும். மதத்தை விட்டுக் கொடுக்க கூடாது. பள்ளிகளில் எந்த விதமான அடையாளங்களும் இருக்கக் கூடாது என்பது அரசின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்ற உத்தரவு.

மத அடையாளம் என்பது இந்து மாணவர்களுக்கும் பொருந்தும். இதில் எதற்காக எதிர்கட்சியினர் அரசியல் செய்கின்றனர் என புரியவில்லை. மத அடையாளங்களை பள்ளிக்குள் அணியாமல் பள்ளிக்கு வெளியே அணியுங்கள் உங்களது மதத்தை பேணிகாப்பாற்றுங்கள்” என அண்ணாமலை தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com