பிரதமரிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை: ஓபிஎஸ் பேட்டி

பிரதமரிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை: ஓபிஎஸ் பேட்டி

பிரதமரிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை: ஓபிஎஸ் பேட்டி
Published on

பிரதமரிடம் மக்கள் பிரச்னை பற்றியே பேசினோம் எனவும், அரசியல் ரீதியாக எதையும் பேசவில்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று சந்தித்து பேசினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராமம் முதல் மாநகர் வரை தமிழகத்தில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. எனவே குடிநீர் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு நிதி வழங்க கோரிக்கை வைத்தோம். கடும் வறட்சி காரணமாக விவசாயிகள், தாங்கள் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் இருக்கிறார்கள். எனவே மத்திய அரசு இந்த பிரச்னையை கருத்தில் கொண்டு விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அத்திக்கடவு திட்டத்திற்கு போதிய நிதியுதவி வழங்கவும், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.

சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பில் சொல்லியபடி, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்களின் கோரிக்கையை பிரதமர் நிதானமாக கேட்டு, உரிய கவனம் செலுத்தப்படும் என கூறினார்.

பாஜக-வுடன் இணக்கமாக உறவு என்ற செய்திகள் பரவுகிறதே என கேட்கப்பட்ட போது, யூகங்கள் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

பிரதமரிடம் மக்கள் பிரச்னை பற்றியே பேசினோம் எனவும், அரசியல் ரீதியாக எதையும் பேசவில்லை என குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com