காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குழந்தைகளுக்கு பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் ஏற்படும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் 1 முதல் 8-ஆம் வகுப்புகள் வரை தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கு செப்டம்பர் 25-ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குறித்து பேசியிருக்கும் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் காய்ச்சல் பெரிய அளவில் இல்லை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறைவிடத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார். தற்போது பரவும் காய்ச்சல் பருவமழை காலத்தில் பரவும் சாதாரண காய்ச்சல்தான் என்றும் 3 முதல் 5 நாட்களுக்குள் அது சரியாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் காய்ச்சல் குறித்து அச்சப்படத்தேவையில்லை என்றும், தமிழகத்தில் போதிய அளவு மருந்துகள் கையிருப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதனால் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்த அவர், காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com