\
“ஜெயலலிதா மரணம் தொடர்பான செய்திகளுக்கு கட்டுப்பாடு” - ஆறுமுகசாமி

“ஜெயலலிதா மரணம் தொடர்பான செய்திகளுக்கு கட்டுப்பாடு” - ஆறுமுகசாமி

“ஜெயலலிதா மரணம் தொடர்பான செய்திகளுக்கு கட்டுப்பாடு” - ஆறுமுகசாமி
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது எனத் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

அதன்படி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. போயஸ் இல்லத்தின் வேலையாட்கள் முதல் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், கட்சியினர் என ஜெயலலிதா தொடர்புடைய அனைத்து தரப்பிடமும் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. 

அதன்படி டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவின் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாகவோ, ஜெயலலிதா மரணம் தொடர்பாகவோ சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது. ஜெயலலிதா தொடர்பான செய்திகளை வெளியிட அனுமதி பெற வேண்டும். விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் செய்தியோ காட்சியோ வெளியிடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com