இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது – டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு நிர்வாகம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடம் 2000 ரூபாய் நோட்டுக்களை இனி வாங்கக் கூடாது என புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய்
ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய்file image

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, 'கிளீன் நோட் பாலிசி' என்ற அடிப்படையில் இந்த ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அதே நேரத்தில், புழக்கத்தில் உள்ள அத்தகைய நோட்டுகள் செல்லும் எனவும், வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை தினமும் ரூ.20,000 மதிப்பு அளவுக்கு வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

2,000 ரூபாய், ரிசர்வ் வங்கி
2,000 ரூபாய், ரிசர்வ் வங்கிtwitter page

மேலும், 'வங்கிகளில் செலுத்தப்படும் 2,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது எனவும், 2018-19ஆம் ஆண்டு முதல் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது எனவும், 2017 மார்ச் மாதத்துக்கு முன்பு 89 சதவிகிதம் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன எனவும் அது தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், " மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு நாளை வங்கியில் பணம் செலுத்தும்போது தங்களது டினாமினேஷனில் 2000 ரூபாய் நோட்டுகள் இருக்கக் கூடாது . ஆகையால் இனிவரும் காலங்களில் இந்த நிமிடம் முதல் கடைகளில் வாடிக்கையாளரிடம் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று மாவட்ட மேலாளர் உத்தரவுக்கிணங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Tasmac shop
Tasmac shoppt desk

இதற்கு மேல் வாங்கும் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். மேலும் மாவட்டம் நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com