\
மீனவர்களின் உடல்களுக்கு டி.என்.ஏ சோதனை

மீனவர்களின் உடல்களுக்கு டி.என்.ஏ சோதனை

மீனவர்களின் உடல்களுக்கு டி.என்.ஏ சோதனை
Published on

ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேரின் உடல்கள், டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன. 

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை தாக்கிய ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். புயலின் போது, கடலுக்கு சென்ற மீனவர்கள் சிலர் தற்போது வரை கரை திரும்பவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேரின் கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளன. ஆழ்கடலிலிருந்து மீட்கப்பட்ட 5 மீனவர்களின் உடல்களும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன.

அதில், சின்னத்துறையைச் சேர்ந்த கிளிட்டஸ், குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின் பாபு, மேல்மணக்குடியைச் சேர்ந்த மைக்கேல் மற்றும் நீரோடியைச் சேர்ந்த இருதயதாஸ், அலெக்சாண்டர் என அடையாளம் தெரியவந்துள்ளது. அதையடுத்து, திருவனந்தபுரத்திலிருந்து இன்று பிற்பகல் சொந்த ஊர்களுக்கு மீனவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட உள்ளன.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com