பெற்றோர் யார் என்பதை உறுதி செய்ய நடத்தப்பட்ட மரபணு பரிசோதனை: முடிவில் நிகழ்ந்த சோகம்

பெற்றோர் யார் என்பதை உறுதி செய்ய நடத்தப்பட்ட மரபணு பரிசோதனை: முடிவில் நிகழ்ந்த சோகம்

பெற்றோர் யார் என்பதை உறுதி செய்ய நடத்தப்பட்ட மரபணு பரிசோதனை: முடிவில் நிகழ்ந்த சோகம்
Published on

விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் குழந்தை மாற்றபட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது. பெற்றோர் யார் என்பது உறுதி செய்யப்பட்டநிலையில், மாற்றுத்திறனுடன் இருந்ததால் குழந்தையை பெற்றோர் கைவிட்டுச்சென்றனர்.

பிரசவத்துக்காக தாய் வீடான விருதுநகர் மாவட்டம் நந்திகுண்டுக்கு வந்த சுப்புலட்சுமி என்ற பெண், கடந்த 7 ஆம்தேதி பிரசவவலி ஏற்பட்டதையடுத்து, மல்லாங்கிணறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர், விருதுநகர் அரசு மருத்துகல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 8 ஆம்தேதி அறுவை சிகிச்சை மூலம் சுப்புலட்சுமிக்கு குழந்தை பிறந்தது. முதலில், சுப்புலட்சுமிக்கு ஆண்குழந்தை பிறந்ததாக செவிலி கூறியிருந்தார். பின்னர் சுப்புலட்சுமிக்கு பெண்குழந்தை பிறந்ததாகவும், கை, கால்விரல்கள் ஒட்டியநிலையில், அன்னப்பிளவு குறைபாட்டுடன் குழந்தை பிறந்ததாகவும் செவிலியர் தெரிவித்துள்ளனர்.

இதனால், தங்கள் குழந்தையை செவிலியர் மாற்றிவிட்டதாக தந்தை சங்கிலி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல்துறையினர் மரபணு சோதனைக்கு ஏற்பாடு செய்தனர். கடந்த 14ஆம் தேதி மரபணு சோதனை நடைபெற்ற நிலையில், மாற்றுத்திறனுடன் பிறந்த பெண்குழந்தை சங்கிலி-சுப்புலட்சுமி தம்பதிக்கு பிறந்தது உறுதி செய்யப்பட்டது.

ஆயினும் மாற்றுத்திறன் உள்ள குழந்தையை ஏற்க இத்தம்பதி மறுத்ததையடுத்து, அவர்களிடமிருந்து சட்ட ரீதியாக குழந்தை பெறப்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அக்குழந்தை மதுரையில் உள்ள கிரேஸ் கென்னட் மருத்துவ மனையில் உள்ள தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com