முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின்
முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின்pt web

கரூர்|திமுக முப்பெரும் விழா: மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சியா திமுக? என மு.க. ஸ்டாலின் உரை!

திமுகவின் முப்பெரும் விழா கரூரில் இன்று நடைபெற்று இருக்கும் நிலையில், சிறப்பாக செயல்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்கப்பட்டிருகிறது.
Published on
Summary

திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் நடைபெற்றிருக்கிறது.

திமுக முப்பெரும்விழா, இந்தாண்டு கரூர்-திருச்சி புறவழிச் சாலையில் கோடங்கிபட்டியில் நடைபெற்றுள்ளது. இந்த முப்பெரும் விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் தலைமை தாங்கிய நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கட்சிப்பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் சுமார் 2 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது, சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய திமுக முப்பெரும் விழா என்பதால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

முப்பெரும் விழா, ஸ்டாலின்
முப்பெரும் விழா, ஸ்டாலின்pt web

முப்பெரும் விழாவின் வரவேற்புரையை வரவேற்புரை ஆற்றிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, “மேற்கு மண்டலத்தில் இருந்து சொல்கிறேன். 2026 திமுகவின் வெற்றிக்கணக்கை இங்கிருந்து தொடங்குவோம். எதிரிகள் யாராக இருந்தாலும், எந்த வடிவில் வந்தாலும், எத்தனை பேராக வந்தாலும், உறுதியாகச் சொல்கிறேன்; நாம் தான் ஜெயிக்கிறோம். நாம் மட்டும்தான் வெல்வோம்” எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று வழங்கப்பட்டது.

முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின்
திருச்சியில் கிடைத்த வரவேற்பு... முப்பெரும் விழா கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்!

16 நிர்வாகிகளுக்கு நற்சான்று

முப்பெரும் விழாவில் கட்சிப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்கப்பட்டது. கட்சிப்பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மூத்த முன்னோடிகள் 6 பேருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

விருது வாங்கியவர்கள் விபரம்:

  • பெரியார் விருது - கனிமொழி கருணாநிதி எம்.பி, திமுக துணைப்பொதுச்செயலர்

  • அண்ணா விருது - சுப. சீத்தாராமன் திமுக தணிக்கைகுழு முன்னாள் உறுப்பினர்

  • கலைஞர் விருது - சோ.மா. ராமச்சந்திரன் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்

  • பாவேந்தர் விருது - குளித்தலை சிவராமன்

  • பேராசிரியர் விருது - மருதூர் இராமலிங்கம் சட்டப்பேரவை முன்னாள் கொறடா

  • மு.க.ஸ்டாலின் விருது - பொங்கலூர் நா. பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்

முரசொலி அறக்கட்டளை சார்பிலான விருதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வத்துக்கு முரசொலி செல்வம் விருது வழங்கப்படுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின்
கரூர் | திமுக முப்பெரும் விழா.. ஏன் முக்கியமானதாகிறது? ஓர் வரலாற்றுப் பார்வை!

“கனவை நனவாக்கிய அண்ணன்”

இதனை தொடர்ந்து பேசிய எம்பி கனிமொழி, “எனக்கு இருக்கும் ஒரே கனவு, தலைவர் கலைஞர் பெற்ற பெரியார் விருதை நான் பெறுவதுதான். இன்று அது நனவாகியுள்ளது. இதை நிறைவேற்றித் தந்திருக்கும் என் அண்ணன், திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினுக்கு என் நன்றி. கொட்டும் மழையிலும் இங்கு நிற்கும் உடன்பிறப்புகளை பார்க்கும்போது, எந்தத் தேர்தலையும், எந்த பகைவரையும் வெல்ல இந்தப் படை போதுமென சூளுரைக்க தோன்றுகிறது. நம் பரம்பரை பகைவரோ, பாரம்பரிய பகைவரோ, புதிய பகைவரோ அத்தனையையும் வென்று காட்டுவோம்” என பேசினார்.

கனிமொழி, ஸ்டாலின்
கனிமொழி, ஸ்டாலின்pt web

ஸ்டாலின் உரை

முப்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இது முப்பெரும் விழாவா, அல்லது நாம் சந்திக்கவுள்ள வெற்றி விழாவா? இது கரூர் இல்லை; திமுக-வின் ஊர் இது. அன்று கொட்டும் மழையில்தான் இதேநாளில் வடசென்னையில் திமுக-வை தொடங்கினா அண்ணா. அப்படிப்பட்ட இக்கழகம் 75 ஆண்டுகள் மட்டுமல்ல, நூற்றாண்டுகளையும் காணப்போகிறோம். உங்களிடம் பேசுவதைவிட, கொட்டும் மழையிலும் கூடியிருக்கும் உங்களின் எழுச்சியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "இந்தாண்டு முப்பெரும் விழாவை கரூரில் நடத்த வேண்டுமென்ற அனுமதி கேட்டு செந்தில்பாலாஜி என்னிடம் வந்தார். பொதுக்கூட்டம் என சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டையே ஏற்பாடு செய்திருக்கிறார் செயல்வீரர் செந்தில்பாலாஜி. நாங்கள் கோடு போட சொன்னால் ரோடு போடுவார் செந்தில்பாலாஜி. தற்போது ரோடு போட்டு அந்த ரோட்டின் மேல் வந்த வாகனத்தில்தான் நான் வந்தேன். மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கக்கூடியவர் செந்தில்பாலாஜி. அவர் வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியாது என அவரை முடக்கப்பார்த்தார்கள். அவரை முடக்க முடியுமா? எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்துக்காட்டுவார். நான் உறுதியாக சொல்கிறேன். கழக வரலாற்றில் இப்படியொரு பிரம்மாண்ட முப்பெரும் விழா நடந்திருக்காது" என்றார்.

எதிரிகளை எல்லாம் கலங்கடிக்கக்கூடிய வெற்றி

தொடர்ந்து, "திறமை, உழைப்பு, ஆற்றல், அறிவு ஆகியவற்றை ஒருங்கே பெற்ற தீரர்களின் கூட்டம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். 2019 முதல் எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்திருக்கிறோம். சாதாரண வெற்றி அல்ல. எதிரிகளை எல்லாம் கலங்கடிக்கக்கூடிய வெற்றி. இந்த வெற்றிப் பயணம் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் 2026லும் தொடரும். திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான அரசியல் இயக்கங்கள் இருக்கிறது. எந்த இயக்கத்திலும் உங்களைப் போன்ற தொண்டர்கள் இருக்க மாட்டார்கள். கழகம் நம்மைக் காத்தது. நாம் கழகத்தைக் காக்க வேண்டும் என்று உழைக்கும் உங்களைப்போல் உடன்பிறப்புகள் இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது. உங்களுக்கு தலைமை தொண்டனாக இருப்பது நான் பெற்ற பேறு.

முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின்
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்.. எதிர்ப்பைச் சந்தித்த பீகார்.. இனி டெல்லியில் ஆரம்பம்!

மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சியா திமுக

தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இடையூறு செய்வது எந்தக் கொள்கை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது காவிக்கொள்கை. அந்த கொள்கைக்கு எதிராக இந்த இயக்கம் போராடிக்கொண்டு இருக்கிறது. இன்று அக்கொள்கையின் அரசியல் முகம் பாஜக. இரு தினங்களுக்கு முன் கூட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியை காப்பாற்றியதே பாஜகதான் என்று உண்மையை பேசியிருக்கிறார். அந்த கைப்பாவை அரசை தூக்கி எறிய திமுகதான் காரணம் என்று நம்மீது பாஜக வன்மத்தை கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு இவளவு குடச்சலைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதைப்பார்த்து  முடங்கிவிடுவோம் என நினைத்தார்கள். திமுக என்ன மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சியா? இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில கட்சி ஆட்சியை பிடித்தது எனும் வரலாறை அமைத்தது நாம். 74 ஆண்டுகால வரலாறு நமக்கு இருக்கிறது.

அதன்பின் தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த ஒவ்வொரு கட்சியும் திமுகவை அழிப்போம்.. ஒழிப்போம் என்றார்கள். ஏன் இப்போதும் சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்களே.. இப்போதும் திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று என்று பேசுகிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி பின்னுக்கு இழுத்து செல்ல போகிறார்களா? நம் கொள்கைகளை விட சிறந்த கொள்கைகளை யாராவது பேசுகிறார்களா?" எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com