சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய உதயநிதி
சென்னையில், பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த 12ஆம் தேதி குரோம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது, பேனர் விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்தார். இந்நிலையில் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார். சுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அவர், சுபஸ்ரீயின் தந்தை ரவி மற்றும் தாய் கீதாவுக்கு ஆறுதல் கூறினார்.