\
உதயநிதி ஸ்டாலின் காரை மறித்த த.மா.கா.வினர்... திருமானூர் அருகே பரபரப்பு

உதயநிதி ஸ்டாலின் காரை மறித்த த.மா.கா.வினர்... திருமானூர் அருகே பரபரப்பு

உதயநிதி ஸ்டாலின் காரை மறித்த த.மா.கா.வினர்... திருமானூர் அருகே பரபரப்பு
Published on

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காரை த.மா.கா.வினர் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக பரப்புரை செய்து வருகிறார். 

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜி.கே. மூப்பனார் அரங்கத்தின் பெயரை மறைத்து திமுக பரப்புரை செய்ததாக புகார் கூறிய தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள், அக்கட்சி கொடியுடன் உதயநிதியின் காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காடரதித்தம் கிராமத்தில் பரப்புரையை முடித்துக் கொண்டு திருமானூர் சென்றபோது உதயநிதியின் காரை த.மா.கவினர் மறித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் உதயநிதி ஸ்டாலின் தனது காரில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com