
திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் திமுக செயல்தலைவர் ஸ்டாலி பேசினார். மிகுந்த உணர்ச்சி பெருக்கோடு அவரது பேச்சு அமைந்திருந்தது. குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய பிரச்னைகள் இருந்ததாக நா தழுதழுக்க ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் “மருத்துவர்கள் அனைவரும் கலைஞரை இனிமேல் காப்பாற்ற முடியாது என்று சொன்னார்கள் ; கழக முன்னோடிகள் அனைவரும் அப்போது என்னிடம் பேசினார்கள். கலைஞருக்கு மெரினாவில் இடம் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். முதலமைசரை சந்திக்கலாம் என்றார்கள். போகலாம் என்று நான் சொன்ன போது ’வேண்டாம் , நீ கட்சி செயல்தலைவர், நாங்கள் சந்தித்து விட்டு வருகிறோம் என்றார்கள்’ ஆனால் நானும் அவர்களோடு சென்றேன்” என்றார்
மேலும் பேசிய ஸ்டாலின் “ முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து மெரினாவில் அண்ணாவின் சமாதிக்கு அருகே கலைஞருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என கேட்டோம், ஆனால் முதலமைச்சரோ சட்டல் சிக்க இருப்பதாகவும், சட்ட ஆலோசனை கேட்டிருப்பதாகவும் சொன்னார். அனைத்தையு மறந்து நான் முதலமைச்சரின் கையை பிடித்து கெஞ்சினேன், அவரோ பார்க்கிறோம் என்று சொல்லி அனுப்பினார்” என பேசினார் ஸ்டாலின்
தொடர்ந்து பேசிய ஸ்டாலின் “மருத்துவமனைக்கு வந்த போது மலை 6.10 மணியளவில் காலைஞர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதால் முதலமைச்சருக்கு கடிதமும் எழுதினேன், ஆனால் ஊடகங்கள் மூலம் இடம் மறுக்கப்பட்டதாக செய்தி வந்தது” பின்னர் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லலாம் என்றார்கள் ; கலைஞர் மெரினாவில் இருக்க காரணம் திமுக வழக்கறிஞர்கள் குழுவே” என்று முடித்தார் ஸ்டாலின்
ஸ்டாலின் பேச்சு வீடியோ :