உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தாயாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
உலகம் முழுவதும் அன்னையர் தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோபாலபுரத்திற்குச் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்துப் பெற்றார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “அன்னையர் தினத்தையொட்டி கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தேன். இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்தி போற்றி மகிழ்ந்திடுவோம்!” என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து திமுக மகளிர் அணி மற்றும் சிறுபான்மை அணியினர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அண்ணா அறிவாலயம் புறப்பட்டுச் சென்றார். மாநில நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கள ஆய்வு நடத்துகிறார்.