“சிறுபான்மையினரின் வாக்குகளால் மட்டுமே திமுக வென்றது” - ஏ.சி.சண்முகம்

“சிறுபான்மையினரின் வாக்குகளால் மட்டுமே திமுக வென்றது” - ஏ.சி.சண்முகம்
“சிறுபான்மையினரின் வாக்குகளால் மட்டுமே திமுக வென்றது” - ஏ.சி.சண்முகம்

சிறுபான்மையினரின் வாக்குகளால் மட்டுமே வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 8141 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்தார். இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக போட்டியிட்ட புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, “சிறுபான்மை மக்கள் மாலை 4 மணி வரை வாக்களிக்க வரவில்லை. தேர்தலை புறக்கணிப்பது போல் இருந்தனர். அவர்களை குறிப்பிட்ட தலைவர்கள் அழைத்து வந்து வாக்களிக்க வைத்தனர். வாணியம்பாடியில் இசுலாமியர்கள் வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் தி.மு.க வென்றிருக்க முடியாது. ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் தி.மு.கவுக்கு மக்கள் வாக்களிக்கவிட்டால் திமுக 15000 வாக்குகல் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருக்கும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த முறை எனக்கு வாய்ப்பு இருந்தும் வெற்றி கிடைக்கவில்லை. இருந்தாலும் பத்தோடு 11ஆக தான் திமுக வெற்றி இருக்கும். இது வேலூர் மக்களுக்கு கிடைத்த இழப்பாகவே நான் பார்க்கிறேன். தேர்தலில் வென்று மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது. வென்றவர்கள் மத்திய அரசின் என்ன என்ன திட்டத்தை கொண்டு வரப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். திமுக கூட்டணி வேலூரில் தோல்வியை தழுவியுள்ளது. சிறுபான்மை மற்றும் இசுலாமிய ஓட்டுக்களை பெற்று அவர் வென்றிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com