Thirumavalavan
Thirumavalavanpt desk

“ஆருத்ரா மோசடி மட்டுமில்லை, பல குற்றவாளிகள் பாஜக-வில் தான் இருக்கின்றனர்“ - திருமாவளவன்

திமுக மீது அண்ணாமலை வைத்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல்வர் மற்றும் திமுக நிர்வாகிகள் எதிர் கொள்வார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
Published on

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விசிக சார்பில் திருமாவளவன் தலைமையில் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தினர். இதையடுத்து உறுதி ஏற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,

  • “திமுக நிர்வாகிகள் மீது அண்ணாமலை வைத்திருக்கும் குற்றச்சாட்டு சொத்து பட்டியல் ஒப்பீடு செய்து இருப்பதாக தான் தெரிகிறது. இது குறித்து என்ன பேசி இருக்கிறார் என முழுமையாக தெரிந்து பின்னர் பேசுகிறேன். ஆனால், முதல்வர் மற்றும் திமுக நிர்வாகிகள் இந்த குற்றச்சாட்டை முறையாக எதிர்கொள்வார்கள்.

  • ஆருத்ரா நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்கள் மட்டுமில்லை பல குற்றவாளிகள் பா.ஜ.க-வில் தான் இருக்கின்றனர். மோசடி செய்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் அதேபோல் நாடு முழுவதும் எதிர்க் கட்சிகள் ஒராணியாக இணைய வேண்டும். வரும் தேர்தல் முக்கியமானது.

  • பிரதமர் தமிழ் குறித்து பேசினாலும், பாரதியார், திருக்குறள் என எது பற்றி பேசினாலும் தமிழர்களை ஏமாற்ற முடியாது.

  • தெலங்கானாவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைத்து இருப்பதற்கு நன்றி. அரசியலமைப்புச் சட்டத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி இருக்கிறது. இதை புரிந்து வரும் தேர்தல் எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com