“வேலூர் தொகுதி திமுகவுக்கு வெற்றுக்கோட்டையாகும்”- அமைச்சர் ஜெயக்குமார்..!

“வேலூர் தொகுதி திமுகவுக்கு வெற்றுக்கோட்டையாகும்”- அமைச்சர் ஜெயக்குமார்..!

“வேலூர் தொகுதி திமுகவுக்கு வெற்றுக்கோட்டையாகும்”- அமைச்சர் ஜெயக்குமார்..!
Published on

வேலூர் தொகுதி திமுகவுக்கு வெற்று கோட்டையாகத்தான் அமையும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடியில் உள்ள மீன்வளக்கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார், மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், வேலூர் தொகுதியை வெற்றிக் கோட்டையாக்குமாறு ஸ்டாலின் அறிக்கை விடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, வேலூர் திமுகவுக்கு வெற்றுக்கோட்டையாகத்தான் அமையும் என்று ஜெயக்குமார் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com