\
”மீனவர் பிரச்னை மூலமாக திமுக அரசியல் செய்ய நினைக்கிறது”- எல்.முருகன் குற்றச்சாட்டு

”மீனவர் பிரச்னை மூலமாக திமுக அரசியல் செய்ய நினைக்கிறது”- எல்.முருகன் குற்றச்சாட்டு

”மீனவர் பிரச்னை மூலமாக திமுக அரசியல் செய்ய நினைக்கிறது”- எல்.முருகன் குற்றச்சாட்டு
Published on

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்தில் 246 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், அப்போது பேசுகையில், “திமுக ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்திருந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்று பிறகுதான் மீனவர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. காரணம், மீனவர் பிரச்னை மூலமாக திமுக அரசு அரசியல் செய்ய நினைக்கிறது. இதனால் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதில்லை. சொல்லப்போனால், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க நினைக்கிறது. ஆனால் சிறைப்பட்ட மீனவர்கள் விவரங்களை தமிழக அரசு தர மறுக்கிறது.

மீனவர் பிரச்னை மட்டுமன்றி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு இந்த நிதியாண்டில் 2 தவனைகளாக ரூ.6,255 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி ஒதுக்கீட்டை மறைத்துவிட்டு, அரசியல் நாடகத்திற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவருகிறார்” என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com