புதுவை ஆளுநர் கிரண்பேடியின் கருத்தை கண்டித்து திமுக வெளிநடப்பு

புதுவை ஆளுநர் கிரண்பேடியின் கருத்தை கண்டித்து திமுக வெளிநடப்பு

புதுவை ஆளுநர் கிரண்பேடியின் கருத்தை கண்டித்து திமுக வெளிநடப்பு
Published on

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் கருத்தை கண்டித்து சட்டப்பேரவையில் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதால் வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,“இன்றைய அவையில் குடிநீர் பிரச்னைக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினேன். அத்துடன் புதுவை மாநிலத்தின் ஆளுநர் கிரண்பேடி தமிழகத்தின் குடிநீர் பிரச்னையை பற்றி வரம்பு மீறி கருத்து தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் குறித்து பேசினால்கூட பரவாயில்லை. தமிழக மக்களை மிக கேவலமான முறையில் கோழைத்தனமானவர்கள் என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக மக்களை அவமானப்படுத்தும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் அனுமதி கேட்டேன். அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். புதுச்சேரி ஆளுநர் பேச்சை கண்டித்த என் பேச்சு மட்டுமல்லாமல் சட்ட அமைச்சர் சண்முகம் பேச்சும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது. புதுச்சேரி ஆளுநரின் கருத்து கண்டிக்கத்தக்கது. அதனைக் கண்டிக்கும் வகையில் வெளிவந்தோம்.” எனத் தெரிவித்தார்.

முன்னதாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய ஸ்டாலின், “நிதி அயோக் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியாவில் உள்ள 21 மாநகரங்கள் 2020ல் நீர் இல்லாத நாளை சந்திக்க நேரிட உள்ளது என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. 2020-ல் தான் சென்னையில் குடிநீர் பஞ்சம் என அறிக்கையில் சொல்லப்பட்டிருந்து. ஆனால் 2019-ல் அது ஏற்பட்டுவிட்டது. நிதி அயோக் அறிக்கையை அரசு பொருட்படுத்தவில்லை. 66% பருவமழை பொய்த்தும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. ஆன்லைன் மூலம் புக் செய்தும் 30 நாட்கள் வரை நீர் கிடைப்பதில்லை. அத்துடன் குடிமராத்து பணிகளும் தோல்வியடைந்துள்ளன” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com