\
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காரை முற்றுகையிட்ட திமுக தொண்டர்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காரை முற்றுகையிட்ட திமுக தொண்டர்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காரை முற்றுகையிட்ட திமுக தொண்டர்கள்
Published on

கோவையில் திமுகவினருக்கு சீட் வழங்காமல் கூட்டணி கட்சிகளுக்கு இடம் வழங்கியதாகக்கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் காரை திமுகவினர் முற்றுகையிட்டனர்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட உபகரணங்களை திறந்துவைக்க அமைச்சர் செந்தில் பாலாஜி வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பிய அவரை, திமுகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு சில வார்டுகளில் திமுகவினருக்கு இடம் வழங்காமல் கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்கியதற்கு ஏன் என்று திமுகவினர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த பதிலும் சொல்லாமல் தனது காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com