\
ஆர்.கே.  நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நாளை அறிவிப்பு

ஆர்.கே. நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நாளை அறிவிப்பு

ஆர்.கே. நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நாளை அறிவிப்பு
Published on: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துசோழன் உள்ளிட்ட 20 பேர் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தனர். அவர்களிடம் ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கருணாநிதியுடன் ஆலோசித்த பின்னர் நாளை அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார். ஆர்.கே. நகர் தொகுதியில் யார் போட்டியிட்டாலும் திமுக வெற்றிபெறும் என்றும் அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com