\
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவா?: மு.க.ஸ்டாலின் மறுப்பு

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவா?: மு.க.ஸ்டாலின் மறுப்பு

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவா?: மு.க.ஸ்டாலின் மறுப்பு
Published on: 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் திமுக ஆதரவு அளிக்கும் என சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுகவில் சசிகலா - பன்னீர்செல்வம் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

மேலும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பது பற்றி தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன் முடிவு எடுப்பார்கள் எனக் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலில் திமுக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும் எனவும், நிர்வாகிகள் யாரும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com