சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் இன்று வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதன்பின் சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பேரவையில் தங்களை குண்டுக்கட்டாகத் தூக்கி, அடித்து உதைத்து சட்டைகளை கிழித்ததாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக-வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி, விருதுநகர், வேலூர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, வேலூர், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சபாநாயகர் தனபால் உருவபொம்மையை எரித்தும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளர். ஒரு சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்