ஐ.யூ.எம்.எல் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை
ஐ.யூ.எம்.எல் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தைPt web

தொகுதிப் பங்கீடு | ஐ.யூ.எம்.எல் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை.. மற்ற கட்சிகளுக்கான அழைப்பு விபரம்!

தொகுதிப்பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கும் திமுக, முதலாவதாக இன்று இந்தியா யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Published on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தைகளை இன்று முதல் துவங்கியிருக்கிறது. நேற்று, இதற்காக 7 பேர் கொண்ட குழுவை அமைத்து திமுக தலைமை உத்தரவிட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக கட்சியின் பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டிருந்தார். மேலும், அமைச்சர் கே.என். நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த 70 நாட்களுக்கு மேல் காத்திருப்பதாக காங்கிரஸ் கூறி வந்தது. இந்த சூழலில் ஏற்கனவே அறிவித்தபடி இன்று முதல் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியிருக்கிறது.

திமுக - ஐ.யூ.எம்.எல் பேச்சுவார்த்தை
திமுக - ஐ.யூ.எம்.எல் பேச்சுவார்த்தைPt web

அதன்படி, இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கட்சியுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை திமுக தொடங்கவிருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு வாணியம்பாடி,சிதம்பரம் கடையநல்லூர் ஆகிய 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருந்தது. ஆனால் 3 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது ஐ.யூ.எம். எல் கட்சியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், திமுக தரப்பில் இக்கட்சிக்கு மீண்டும் 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.

தொடர்ந்து, நாளை மதிமுக, மமக மற்றும் மநீம ஆகிய கட்சிகள் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, பிப்ரவரி 26-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பிப்ரவரி 27-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேச்சு வார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்திருக்கிறது. அதேசமயம், காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு இன்னும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. விரைவில் அக்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.யூ.எம்.எல் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை
”தந்தைக்கு மாரடைப்பு; யாரும் காண வரவில்லை”.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் சபாநாயகர் மகன்.!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com