\
உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் - பிரதமருடன் தொலைபேசியில் பேசிய மு.க.ஸ்டாலின்

உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் - பிரதமருடன் தொலைபேசியில் பேசிய மு.க.ஸ்டாலின்

உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் - பிரதமருடன் தொலைபேசியில் பேசிய மு.க.ஸ்டாலின்
Published on

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, பிரதமரிடம் தொலைபேசியில் பேசியதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ள ஸ்டாலின், ஓபிசி பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று கூறியுள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என 3 குழுக்கள் அமைத்து இதற்கான நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், 3 மாதங்களில் முடிவை அறிவிக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com