'வாக்குவங்கி அரசியலுக்காக பதட்டத்தை உண்டாக்குகிறார் அண்ணாமலை' - திமுக குற்றச்சாட்டு

'வாக்குவங்கி அரசியலுக்காக பதட்டத்தை உண்டாக்குகிறார் அண்ணாமலை' - திமுக குற்றச்சாட்டு

'வாக்குவங்கி அரசியலுக்காக பதட்டத்தை உண்டாக்குகிறார் அண்ணாமலை' - திமுக குற்றச்சாட்டு
Published on

தமிழகத்தை பதட்ட நிலையில் வைத்திருக்க கோவை விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்து வருவதாக திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்தி, “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தவறான தகவல்களை தெரிவித்திருக்கிறார். முபீன் குறித்து மத்திய உளவுத்துறை ஏற்கனவே தமிழக அரசை எச்சரித்துள்ளதாக அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்திருப்பது முற்றிலும் பொய். தவறான தகவல்கள் அளிப்பதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்

ராஜீவ் காந்தி மேலும் பேசுகையில், “அரசியல் இருப்பை தக்க வைக்க அண்ணாமலை கோமாளித்தனமாக செயல்படுகிறார். வாக்குவாங்கி அரசியலுக்காக அண்ணாமலை பதட்டத்தை உண்டாக்குகிறார். கர்நாடகவிலிருந்து கோவைக்கு வரும் தொழில் நிறுவனங்களை தடுக்கவே அண்ணாமலை கோவையை பதட்டமாக வைத்திருக்கிற முயல்கிறார். அண்ணாமலை போன்றவர்கள் பதட்டத்தை உண்டாக்கும் வகையில் செயல்படுவதை நிறுத்தினாலே கோவை சம்பவங்கள் போன்று எதிர்காலத்தில் நடக்காமல் தவிர்க்க முடியும்” என்றார்.

இதையும் படிக்கலாமே: கோவை கார் வெடிப்பில் ஈடுபட்டவருடன் தொலைபேசியில் பேசினாரா? விசாரணை வளையத்திற்குள் இளைஞர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com