”ஓடிடியில் வெளியாகும் படங்களில் அதிக இஸ்லாமிய வெறுப்பு இருக்கிறது” - மனுஷ்யபுத்திரன் நேர்காணல்
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
புதிய தலைமுறைக்கு திமுக செய்தித்தொடர்பாளர் மனுஷ்ய புத்திரன் அளித்த நேர்காணலில் ”தி கேரளா ஸ்டோரி” என்ற படம் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். அதனைப் பார்க்கலாம்..
ஒடிடி போன்ற தளங்களில் வெளியிடப்படும் பெரும்பான்மையான திரைப்படங்கள் மதவாத சக்திகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது பெரும்பாலான திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிக்கக்கூடிய, அல்லது தொடர்ந்து மக்கள் மனங்களில் , இஸ்லாமியர்களை பற்றிய தவறான கருத்துக்களை பதிவு செய்யப்படுவதைப்போல் பல திரைப்படங்கள் இந்தியாவில் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஒடிடியில் பத்துப்படங்கள் வெளியிடப்பட்டால், அதில் ஐந்து படங்கள் இப்படி தான் இருக்கும். இதைப்போன்ற படங்கள் தயாரிக்கப்படுவதற்கு பின்புலத்தில் அதிகளவு நிதி உதவி செய்யப்படுகிறது.
இவர்களின் நோக்கம் இஸ்லாமியர்களை அந்நியப்படுத்த வேண்டும். இதற்கு ஒரு உதாரணம் தான் இப்படம்” என்று பேசியுள்ளார்.