மதிமுக, CPM, CPI கட்சிகளுடன் திமுகவின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? எத்தனை தொகுதிகள்?

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்குக்கான பணிகள் தீவிரம் அடைந்துவரும் நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக திமுக அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைஃபேஸ்புக்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்குக்கான பணிகள் தீவிரம் அடைந்துவரும் நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக திமுக அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.

இதன்படி, வருகின்ற பிப்ரவரி 3-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும், பிப்ரவரி 4-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மதிமுகவுடனும் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
I.N.D.I.A கூட்டணியில் நிலவும் குழப்பங்கள் - விளக்கும் மூத்த பத்திரிகையாளர் ஐய்யநாதன்

மதிமுக:

பிப்ரவரி 4-ஆம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுகவுடன் திமுக ஆலோசனை நடத்தவுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, மதிமுக - திமுக இடையேயான தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டமானது டி.ஆர் பாலு தலைமையில் நடைபெறவுள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
“ஆட்டம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது; இன்னும் மிச்சமிருக்கிறது” - தேஜஸ்வி

திருச்சியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இதற்கான பணிகளை அவர் தொடங்கியதாகவும் தெரிகிறது.

முன்னதாக கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுகவினை சேர்ந்த கணேச மூர்த்தி என்பவர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் தற்போது ஈரோடு கொடுக்கப்படாமல் திருச்சியை மதிமுகவிற்கு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் திருச்சி தொகுதியை பொறுத்தவரை கடந்த முறை காங்கிரஸின் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு - 7 , கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு- 4 இடங்கள் கொடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
திமுக கூட்டணி முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் எவை?

தேசிய அளவில் திமுக என்பது மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது. ஆகவே அதிக தொகுதிகளில் போட்டியிட்டால் அதிக அளவு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது, ஆகவே கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்படும் இடங்கள் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் அதிக தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் நிலையில் தேசிய அளவில் அரசியல் மாற்றத்தினை தீர்மானிக்கும் அளவிற்கு அதிகாரம் கிடைக்கப்பெறும். இது போன்ற காரணங்கள்தான் தற்போதைய தொகுதி பங்கீடு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com