இது மோடி சுட்ட வடை - திமுகவினர் நூதன பரப்புரைpt desk
தமிழ்நாடு
பிரதமர் மோடிக்கு எதிராக திமுகவினர் நூதன பரப்புரை...!
பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பொதுமக்களுக்கு வடை விநியோகித்து நூதன பரப்புரை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் திமுகவினர் பொதுமக்களுக்கு உளுந்து வடை வழங்கியதுடன், பிரதமர் மோடி வாயிலே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் விமர்சித்தனர். “மோடி சுட்ட வடைகள்“ என்ற தலைப்பில் சில திட்டங்களை பட்டியலிட்டு, துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.
DMKpt desk
ஈரோட்டில் திமுக சார்பில் எல்லோருக்கு எல்லாம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, டீசல் விலை குறைப்பு, கறுப்பு பணம் மீட்பு உள்ளிட்டவற்றை செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டி, கையில் வடையுடன் திமுகவினர் விமர்சனம் செய்தனர்.