தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக வாக்களிக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சுழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நேற்று பொறுப்பேற்றது. புதிய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்யப்பட்டது. இதேபோல் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது. சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி இம்முடிவை எடுத்துள்ளது.