தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிருபித்துள்ளதாக தேதிமுக பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா, தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று விழாவில் பல நலத்திட்டங்களை அவர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து முப்பெரும் விழா மேடையில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தன்னுடைய வாழ்க்கையை சிஸ்டமேட்டிக்காக கொண்டு மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்தவர் தான் தலைவர் விஜயகாந்த் என்று தெரிவித்தார். மேலும் திமுக ஒரு தில்லு முல்லு கட்சி என்பதை நிருபித்துள்ளதாகவும், தமிழகத்திலுள்ள கட்சிகள் கூட்டணி அமைக்காமல், பணம் கொடுக்காமல் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் தேமுதிக தனித்து போட்டியிட தாயாராக உள்ளது, எங்களை போன்று மற்ற கட்சிகள் போட்டியிட தயாரா என சவால் விட்டார். ஸ்டாலின் மக்கள் முதல்வராக இருந்தால் தங்களது அமைச்சர்கள் வீட்டிற்கு ரெய்டு அனுப்பி உத்தமர்கள் என நிரூபியுங்கள் பார்ப்போம் எனவும் தெரிவித்தார்.