\
சேலத்தில் ரயில் மீது கல்வீசி தாக்குதல்

சேலத்தில் ரயில் மீது கல்வீசி தாக்குதல்

சேலத்தில் ரயில் மீது கல்வீசி தாக்குதல்
Published on

சேலத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில் மீது கல்வீசியும் தாக்குதல் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் பேருந்து சேவையில் பெரிய அளவில் பாதிப்பில்லை. அதேசமயம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சேலத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் ஓயாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com