மதுரை: நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசியதை கண்டித்து திமுகவினர் ரயிலில் ஏறி போராட்டம்

மதுரை: நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசியதை கண்டித்து திமுகவினர் ரயிலில் ஏறி போராட்டம்
மதுரை: நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசியதை கண்டித்து திமுகவினர் ரயிலில் ஏறி போராட்டம்

நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசியதை கண்டித்து மதுரையில் திமுகவினர் தடையை மீறி ரயில் இன்ஜின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலின்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் நிதியமைச்சர் விமான நிலையத்தில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரை விமான நிலைய வளாகத்தில் நிதியமைச்சரின் கார் மீது சிலர் காலணிகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை கண்டிக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் மதுரை ரயில் நிலையத்திற்குள் திடீரென் நுழைந்து திருச்செந்தூர், பாலக்காடு ரயில் இஞ்சின் மீது ஏறி பாஜகவை கண்டித்தும், அண்ணாமலையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். திமுகவினர் ரயிலில் ஏறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது ரயில்வே நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் திமுகவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரயிலில் இருந்து கீழே இறங்கினர்.

இதைத்தொடர்ந்து திமுகவினர் பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திமுகவினர் பிரதமர் மோடியின் படங்களை கிழித்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். இதையடுத்து திமுகவினரை கைது செய்த போலீசார் அவர்களை பேருந்தில் அழைத்துச் சென்றனர். திமுகவினரின் திடீர் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com