96 வது பிறந்தநாள்: கலைஞர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதிக்கு இன்று 96வது பிறந்த நாள். இதையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு, பொருளாளர் துரைமுருகன், ஆ.ராசா எம்.பி. ஜெ.அன்பழகன், பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது. மாலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.