\
திமுக பி‌ரமுகர் வெட்டிக்கொலை - 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

திமுக பி‌ரமுகர் வெட்டிக்கொலை - 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

திமுக பி‌ரமுகர் வெட்டிக்கொலை - 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
Published on

திருப்பூரில் சாலையில் நடந்து சென்ற திமுக பிரமுகர், 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுபூலுவப்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருப்பூரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். திமுக மாணவரணியிலும் இவர் உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில் பாலமுருகன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை வழிமறித்துள்ளனர். 

பொதுமக்கள் முன்னிலையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பாலமுருகனை வெட்டிவிட்டு அந்தக்கும்பல் தப்பியோடிவிட்டது. தாக்குதலில் பலத்த காயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com