தமிழ்நாடு
திமுக வேட்பாளர் பட்டியல் நாளைக்குள் வெளியிட திட்டம்
திமுக வேட்பாளர் பட்டியல் நாளைக்குள் வெளியிட திட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளைக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை இறுதி செய்வதிலும் இட பங்கீட்டை விரைந்து முடிப்பதிலும் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அக்கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இன்று மாலைக்குள் கூட்டணி கட்சியினருடன் பேசி இறுதி வேட்பாளர் பட்டியலை அனுப்பும்படி அந்த அறிக்கையில் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்டவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது