தமிழ்நாடு
“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி
“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி
இடைத்தேர்தல்களில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கும், மாண்புமிகு பிரதமருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், “நாங்குநேரி, விக்கிரவாண்டியில் மக்கள் செல்வாக்கோடு அஇஅதிமுக வேட்பாளர்கள் மாபெரும் வெற்றிபெறுவர்; இடைத்தேர்தல்களில் பணம் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது” என குற்றம்சாட்டினார்.