சிறைத்தண்டனை
சிறைத்தண்டனைweb

நீலகிரி | அரசு வேலை வாங்கி தருவாக 14 லட்சம் மோசடி.. திமுக பிரமுகர் உட்பட 2 பேருக்கு சிறை!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய திமுக பிரமுகர் உட்பட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குன்னூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு .
Published on

என்ன நடந்தது?

குன்னூர் கிருஷ்ணபுரத்தை சேர்ந்த திமுக வார்டு கிளை செயலாளர் அப்துல் ரஹிம், இவர் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். மற்றொருவர் குன்னூர் அருகே உள்ள அதிகரட்டி பகுதியை சேர்ந்த ஜோகி ஆகிய  இருவரும் சேர்ந்து கடந்த 2015 ல், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி குன்னூரை சேர்ந்த அனிதா, சந்தோஷ்குமார், சதிஷ்குமார், மஞ்சுநாதன் ஆகியோரிடம் 14 லட்சம் ரூபாய் பணம் பெற்றிருந்தனர்.

வேலை கிடைக்காமல் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் பணத்தை திருப்பி தர கேட்டும் தரவில்லை, இவர்கள் இருவர்  மீது குன்னூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குன்னூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

3 ஆண்டுகள் சிறை..

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்சலாம் இதற்கான தீர்ப்பை
வழங்கினார். அதில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய அப்துல் ரஹிம், மற்றும் ஜோகி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், பணம் வாங்கியவர்களுக்கு மொத்தம் 26 லட்சத்து 34ஆயிரம் ரூபாயை 2 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என குன்னூர் நடுவர் நீதிமன்ற  நீதிபதி  உத்தரவிட்டார்.

குன்னூர் நடுவர் நீதிமன்றம்
குன்னூர் நடுவர் நீதிமன்றம்

மேல் முறையீடு செய்ய 1 மாதகாலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com