\
திமுக பிரமுகர் தற்கொலை விவகாரம் - தீவிரமெடுக்கும் விசாரணை..!

திமுக பிரமுகர் தற்கொலை விவகாரம் - தீவிரமெடுக்கும் விசாரணை..!

திமுக பிரமுகர் தற்கொலை விவகாரம் - தீவிரமெடுக்கும் விசாரணை..!
Published on

பரமத்திவேலூரில் திமுக நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் செங்கப்பள்ளியைச் சேர்ந்த மருத்துவர் ஆனந்த். இவர் திமுகவில் நாமக்கல் மேற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்தார். நேற்று துப்பாக்கியுடன் தனது தோட்டத்திற்குச் சென்ற அவர், கழுத்தில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னையால் இந்த தற்கொலை நடத்திருப்பதாக தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக ஆனந்தின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என பல்வேறு நபர்களிடம் காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட ஆனந்துக்கு, செல்வி என்ற மனைவியும், அபர்ணா என்ற மகளும் உள்ளனர். ஆனந்த், நளினி சிதம்பரத்தின் உறவினர் எனக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com